உலகம்

‘இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது’: உலக சுகாதார நிறுவனம்

DIN

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிற நாடுகளுடனான போக்குவரத்தை துண்டித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் உருமாற்றம் அடைந்த பி.1.617 எனும் கரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதேபோல் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT