முகப்பு
உலகம்

அதிகரிக்கும் கரோனா: 'இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்'

கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும் என வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும் என வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கரோனா மருத்துவ உதவிகளை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த கடினமான நேரத்தில் அமெரிக்கா தனது முக்கியமான  நட்பு நாடுகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →