உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 34.87 லட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 34.87 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 34.87 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 16,79,88,779 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 34,87.066 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 14,93,13,739 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 15,18,7,974 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 97,624 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா கரோனா பாதிப்பில் முதலிடத்திலும், அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,392,2,937 ஆகவும், 26,94,8,874 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.