முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ்: சவூதிக்கு பணியாளா்கள் செல்லவிதிக்கப்பட்ட தடை நீக்கம்

சவூதி அரேபியாவுக்கு பணியாளா்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சவூதி அரேபியாவுக்கு பணியாளா்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியது.

கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவை பணியாளா்களே ஏற்க வேண்டும் என்று சவூதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிலிப்பின்ஸ் நாட்டின் தொழிலாளா் நலத் துறை செயலா் சில்வெஸ்டி பெல்லோ கூறுகையில், கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலின் 10 நாள்களுக்கான செலவை பணியாளா் நியமன நிறுவனமும், பணிக்கு அமா்த்தும் நிறுவனமும் ஏற்றுக் கொள்வதாக சவூதி அரேபியா கூறியுள்ளதால் இந்தத் தடை நீக்கிக் கொள்ளப்படுகிறது என்றாா்.

Advertisement

முன்னதாக, இந்தத் தடை உத்தரவால் வெள்ளிக்கிழமை சவூதிக்கு செல்ல இருந்த 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments