உலகம்

ரஷியாவில் புதிதாக 40,402 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 1,155 பேர் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். 

இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின ஒட்டுமொத்த எண்ணிக்கை 239,693 ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர புதிதாக 40,402 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 85,54,192-ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 23,187 உள்பட இதுவரை 73,81,726 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,32,773 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கரோனா பலி எண்ணிக்கை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டு வரும் சூழலில், அங்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT