உலகம்

டிரம்ஸ் வாசித்து மோடி அசத்தல்; வியந்த வெளிநாடுவாழ் இந்தியர்கள்

DIN

ஸ்காட்லாந்தில் உள்ள இந்தியர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, டிரம்ஸை இசைத்து காமித்து அவர்களை அசர வைத்துள்ளார். ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டுக்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி கிளாஸ்கோ சென்றிருந்தார். பயணம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, அவரை வழி அனுப்பி வைப்பதற்காக வெளிநாடுவாழ் இந்தியர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

டிரம்ஸ் கருவி இசைத்து காமித்தும் கர கோஷம் எழுப்பியும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மோடியை உற்சாகப்படுத்தினர். இந்தியாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து அவர்கள் வந்திருந்தனர். அங்கு குவிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கைக்குலுக்கிய மோடி, டிரம்ஸ் கருவிகளை இசைத்து காமித்து அவர்களை அசர வைத்தார்.

அதுமட்டுமின்றி, அங்கிருந்த குடும்பங்களிடம் கலந்துரையாடினார். குழந்தைகளின் தலையை கோதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். முன்னதாக, கிளாக்கோ மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு பூஜ்யம் சதவிகிதமாக குறைக்கப்படும் என உறுதிமொழி அளித்தார்.

அதேபோல், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு பூர்த்தி செய்வோம் என்றும் குறிப்பிட்டார். பருவநிலை மாநாட்டில் கலந்த கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, பிரிட்டன், இஸ்ரேல், நேபாளம், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டு பிரதமர்களுடன் இர தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

முன்னதாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று ரோமில் நடைபெற்ற ஜி 20 உச்ச மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT