உலகம்

கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

DIN

இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இனி சிக்கல் இருக்காது.

தடுப்பூசி தொடர்பாக மருத்துவ சோதனை தரவுகளை சமர்ப்பிக்குமாரு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருந்தது.

மேலும், தடுப்பூசியின் கூடுதல் திறன் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் முடிவுகள் குறித்த அறிக்கையினை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பியது.

இதனையடுத்து அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ஈரான் உள்பட பல்வேறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. எனினும் ஒருசில நாடுகள் இதிலிருந்து முரண்பட்டுள்ளன. கேவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை  தங்கள் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் இதுவரை எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள ஒப்புதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT