உலகம்

கரோனாவால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பு; எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

DIN

ஐரோப்பிய கண்டத்தில் அதிகரித்துவரும் கரோனா உயிரிழப்பு கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் அந்த கண்டத்தில் கரோனா காரணமாக மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பர் என்றும் எச்சரித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்ட இயக்குநர் ஹான்ஸ் க்ளூஜ் இதுகுறித்து கூறுகையில், "அங்கு 53 நாடுகளில் தற்போது நிலவும் பரவல் தன்மை மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 

தற்போதை நிலை தொடர்ந்தால், பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கரோனா காரணமாக மேலும் ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பர்" என்றார். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்ட பிரிவில், மத்திய ஆசியாவில் உள்ள நாடுகள் உள்பட 53 நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT