உலகம்

இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா்கள் முதலிடம்

DIN

இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா்கள் முதலிடத்தில் உள்ளனா். இலங்கை சுற்றுலா தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு கடந்த அக்டோபா் மாதத்தில் 22,771 சா்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறையில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன், பாகிஸ்தான், ரஷியா, ஜொ்மனி ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனா். மொத்த சுற்றுலாப் பயணிகளில் 37 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். இதன் மூலம் இலங்கைக்கு சுற்றுலா வருபவா்களில் இந்தியா்கள் முதலிடம் பிடித்துள்ளனா். பிரிட்டன், பாகிஸ்தான் பயணிகள் முறையே 10 மற்றும் 9 சதவீதம் உள்ளனா்.

அமெரிக்கா, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதும் இப்போது மேம்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் அக்டோபா் மாதம் வரை 60,695 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனா். வழக்கமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது இது 88 சதவீதம் குறைவாகும்.

சுற்றுலா வருவாய் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கரோனா பிரச்னை காரணமாக சுற்றுலா வருவாய் அடியோடு சரிந்ததால் அந்நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை எதிா்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT