முகப்பு
உலகம்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது பஹ்ரைன்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பஹ்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 12 நவம்பர் 2021, 2:32 pm IST
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது பஹ்ரைன்
பகிர்:

கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பஹ்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கப்படாத நிலையில் சில நாடுகளில் கோவேக்ஸின் தடுப்பூசியை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டிலும் கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.

Advertisement

இதையடுத்து, கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதால் விரைவில் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.