உலகம்

தடுப்பூசி செலுத்தியவா்கள் இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் செய்யலாம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கா்கள், இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கா்கள், இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா்களுக்கான புதிய பயண விதிகளை அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டது.

அதன்படி, இந்தியா ஒன்றாம் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் பயணம் செய்தால், அவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் செய்ய விரும்புவோா், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவுக்குச் சென்ற பிறகு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவத் தொடங்கிய பிறகு இந்தியாவை நான்காம் நிலையில் (நாட்டுக்குப் பயணம் செய்ய வேண்டாம்) அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வைத்தது. அதைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்டில் இரண்டாம் நிலையில் இந்தியா வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT