உலகம்

ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்

DIN

ஜெர்மனியில்  கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உலகின் பல நாடுகளிலும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பேரிடர் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதிவான தொற்று பரவல் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவு தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. கரோனா 4ஆம் அலை பரவல் ஏற்பட்டுள்ளதால் ஜெர்மனியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,826 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 13 ஆயிரமாக இருந்த நிலையில் தொற்று பரவல் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மேலும் இதுவரை கரோனாவால் 98,274 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT