உலகம்

இஸ்ரேலில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு இஸ்ரேலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலில் 57 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT