ஜப்பான் இளவரசி மகோ 
உலகம்

காதலுக்காக அரச பட்டத்தை உதறி தள்ளிய ஜப்பான் இளவரசி; மனங்களை இணைக்கும் அக்டோபர் 26

ஜப்பான் இளவரசி மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

DIN

ஜப்பான் இளவரசி மகோ, தன்னுடைய கல்லூரி நண்பரை அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் காதல் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பிய நிலையில், சிலர் கடுமையாக விமரிசித்துவந்தனர்.

ஜப்பான் மன்னர் நருஹிதோவின் இளைய சகோதரரின் மகளான மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மகோவும் கெய்கோமுரோவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், கெய்கோமுரோவின் தாய்க்கும் அவரை திருமணம் செய்யவிருந்தவருக்கிடையே பண பிரச்னை நிலவுவதாக செய்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டன. இதையடுத்து, 2018ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஜப்பான் இளவரசியின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

அந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கெய்கோமுரோ சட்ட படிப்பை மேற்கொள்வதற்கு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனிடையே, இந்த திங்கள்கிழமைதான் அவர் ஜப்பானுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் இளவரசியின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். அந்த வகையில், ஜப்பான் இளவரசி அரச பட்டத்தை துறக்கவுள்ளார். அரச திருமணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் இந்த திருமணத்தில் நடைபெறாது. அதேபோல், அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு கோடி கணக்கில் பணம் அளிப்பது வழக்கம். ஆனால், மகோ அதனையும் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகோவும் கெய்கோமுரோவும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்யவுள்ளார்கள். அதேபோல், மகோ அரசு குடும்பத்திலிருந்து வெளியேறுவதும் அதிகாரப்பூர்வதாக பதிவு செய்யப்படும் என செய்திகள் கூறுகின்றன. அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை மகோ திருமணம் செய்து கொள்வது ஜப்பான் ஊடகங்களில் பெரும் பேசு பொருளானது.

இதுகுறித்து மக்களிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், திருமணத்திற்கு ஆதரவாக 38 சகவிகிதத்தினரும் எதிராக 35 சகவிகிதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

காவலரான விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

காலைத் தென்றல்... கோமதி பிரியா!

குறும்பின் நகல்... கிருத்திகா!

ஐடி ஊழியர்கள் காரை வழிமறித்து தகராறு செய்த லட்சுமி மேனன்! வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT