ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 24,522 பேருக்கு பாதிப்பு
ரஷியாவில் புதிதாக ஒரேநாளில் 24,522 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் புதிதாக ஒரேநாளில் 24,522 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,522 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 3,993 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது கடந்த ஜூலைக்குப் 19ஆம் தேதிக்குப் பிறகு ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 2,215 பேர் அறிகுறியற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,35,548 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- ஐபிஎல்: பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, எவ்வளவு தெரியுமா?
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 887 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,08,142ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 19,955 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 66,92,722ஆக உயர்ந்துள்ளது.