கத்தாா் தலைநகா் தோஹாவில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களித்த பெண். 
உலகம்

கத்தாரில் முதல்முறையாக பேரவைத் தோ்தல்

கத்தாா் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கத்தாா் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தல் மூலம், 45 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில் 3-இல் 2 பங்கு உறுப்பினா்களை பொதுமக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுக்கவுள்ளனா்.

இந்தத் தோ்தலில் சுமாா் 300 போ் போட்டியிடுகின்றனா்.

சட்டங்களை இயற்றுதல், பட்ஜெட்டை அங்கீகரித்தல், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தல் ஆகிய பணிகளை ஷுரா கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. எனினும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை.

தோ்தல் மூலம் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் முறை கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருந்து வந்தனா்.

இந்த நிலையில், கத்தாரில் வரும் 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள நிலையில், சீா்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகல்!

டிஜிட்டல் கைது புகார்கள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

84 மார்க் போதாது… சிவகுமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அமெரிக்காவுக்கு நிலம் விற்று, காட்டு வழியாக சென்ற 50 இளைஞர்கள்! ஒருவர் செலவிட்டது ரூ.57 லட்சம்

அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தீபக்!

SCROLL FOR NEXT