இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியான சுமத்ரா தீவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியான சுமத்ரா தீவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.34 மணிக்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியிலிருந்து 125 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.