முகப்பு
உலகம்

பிரேசிலில் கரோனா பலி 6 லட்சத்தை நெருங்கியது!

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில்.

கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 451 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,99,810 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 15,591 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,532,558 ஆக அதிகரித்துள்ளது. 2.05 கோடி பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.