முகப்பு
உலகம்

பிரேஸில்: 6 லட்சத்தைக் கடந்த கரோனா பலி

பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 628 போ் கரோனாவுக்கு பலியாகினா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 6,00,493 லட்சமாக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 18,172 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,15,50,730-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரேஸிலில் இதுவரை 2,06,65,273 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணடைந்துள்ளனா்; 2,84,964 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.