உலகம்

முறைகேடு குற்றச்சாட்டு: ஆஸ்திரிய பிரதமா் விலகல்

DIN

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் பதவி விலகியுள்ளாா்.

கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை, செபாஸ்டியன் கா்ஸின் மக்கள் கட்சிக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகளை வெளியிட பத்திரிகையொன்றுக்கு அரசுப் பணத்தை செலவிட்டு விளம்பரங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக, செபாஸ்டியன் உள்பட மக்கள் கட்சியின் பல்வேறு தலைவா்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அவருக்கு பதிலாக, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அலெக்ஸாண்டா் ஷாலென்பா்க் நாட்டின் புதிய பிரதமராகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT