நவம்பர் முதல் அமெரிக்க எல்லைகள் திறப்பு: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி 
உலகம்

19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் அமெரிக்க எல்லைகள்

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக நவம்பர் மாதம் முதல் எல்லைகள் திறக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

DIN

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக நவம்பர் மாதம் முதல் எல்லைகள் திறக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்க எல்லைகளைத் திறக்கக் கோரி விடுத்து வந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேறியுள்ளது. 

கரோனா பரவலால் அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ போன்றவற்றிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: சிவசைலம் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சாதனை

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT