உலகம்

பிலிப்பின்ஸ் வெள்ளப் பெருக்கு: 19 பேர் பலி

DIN

பிலிப்பின்ஸ் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 19 பேர் பலியானதோடு 13-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருக்கிறார்கள்.

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த திடீர் மழைப்பொழிவால் வடக்கு பிலிப்பின்ஸானது கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

இதுவரை மழைவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெங்குவாட் மற்றும் கொம்பாசு பகுதியில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகினர். மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காணாமல் போன 13-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடும்வெள்ளம் காரணமாக 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT