உலகம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதியளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 8ஆம் தேதி முதல் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

முக்கொம்பில் அணை கட்டிய ஆா்தா் காட்டனுக்கு மரியாதை

தஞ்சாவூரில் கோடை மழை

SCROLL FOR NEXT