ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 165 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுபடுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (அக்-17) ஞாயிற்றுக்கிழமை மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 165 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.அவர்கள் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டது. மேலும் ஏமன் படையினர் 25 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏமனின் மரீப் மாகாணத்தில் சமீப காலமாக ஹகுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறல் அதிகரித்து வந்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.