முகப்பு
உலகம்

ரஷியாவில் கரோனா பலி உச்சம்: ஒரேநாளில் 1,123 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,123 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,123 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது, நாட்டில் இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின ஒட்டுமொத்த எண்ணிக்கை 233,898-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர புதிதாக 36,582 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83,52,601-ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 29,151 உள்பட இதுவரை 72,42,735 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 875,968 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கரோன பலி எண்ணிக்கை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டு வரும் சூழலில், அங்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.