கோப்புப்படம் 
உலகம்

கரோனாவுக்கு எதிரான போரில் திருப்புமுனை; வைரஸை கட்டுப்படுத்தும் பாம்பின் விஷம்:  ஆய்வில் தகவல்

ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கரோனா வைரஸை  கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

DIN

ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கரோனா வைரஸை  கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கரோனா வைரஸை  கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜரரகசு பிட் வைப்பர் என்ற ஒரு வகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறு குரங்கின் உடலில் வைரஸ் பரவும் திறனை 75 சதவிகிதம் குறைப்பதாக மூலக்கூறு என்ற விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரபேல் கைடோ கூறுகையில், "வைரஸ் வெளியிடும் முக்கிய புரதத்தை பாம்பின் விஷம் கட்டுப்படுத்துவதை எங்களால் ஆய்வின் மூலம் உறுதிபடுத்த முடியும்" என்றார்.

மூலக்கூறு என்பது (பெப்டைட்)அமினோ அமிலத்தின் குறுகிய சங்கிலியாகும். இதன் மூலம், கரோனா வைரஸின் (Enzyme) நொதியுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும். வைரஸை உற்பத்தி செய்வதில் இதுவே முக்கிய பங்காற்றுகிறது. சாவோ பவுலோவில் உயிரியல் சேகரிப்பு ஆய்வகத்தை நடத்திவரும் ஊர்வன நிபுணர் கியூசெப் பூர்டோ இதுகுறித்து கூறுகையில், "பாம்பை பிடித்தி வளர்ப்பதன் மூலம் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை உள்ளடக்கிய பெப்டைட்டை ஆய்வகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும்.

உலகத்தை பாதுகாக்குகிறோம் என்ற பெயரில் பிரேசிலில் இருக்கும் ஜரரகசு பாம்புகளை வேட்டையாடச் செல்லும் மக்களை எண்ணி அச்சப்படுகிறோம். பாம்பால் மட்டுமே கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது" என்றார். விஷத்தின் மூலக்கூறுகளிலிருந்து உருவாக்கப்படும் மருந்துகளின் திறன் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் என சாவோ பவுலோ பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்காக புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT