காலநிலை மாற்றத்தால் 50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் பலி: ஆய்வில் தகவல் 
உலகம்

காலநிலை மாற்றத்தால் 50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் பலி: ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் தற்போது முக்கிய கவனம் பெற்று வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுதல்,வழக்கத்திற்கு மாறான வெப்ப அலைகளின் தாக்கம், அதன் காரணமாக நிகழும் காட்டுத்தீ விபத்துகள், அதீத மழைப்பொழிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உலக வானிலை மையம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெரும் சேதத்தை விளைவித்துவருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த ஆய்வின்படி கடந்த 1970 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 11,000  பேரிடர் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பலியான 20 லட்சம் மக்களில் 91 சதவிகிதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனும் அதிர்ச்சிகரத் தகவலை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் இதனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT