உலகம்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்

DIN

கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை தலிபான் பிரிதிநிதி நேற்று சந்தித்து பேசினார்.

தலிபான் பிரதிநிதி ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை நேற்று (செவ்வாய்கிழமை) தோஹாவில் சந்தித்து பேசினார். இந்திய தூதரை சந்தித்து பேசிய ஷேர் முகமது 1970 மற்றும் 1980களில் இந்தியா ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர் ஆவார். ஆப்கானிஸ்தானை சமீபத்தில் கைப்பற்றிய தலிபான்கள் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவரும் ஒருவர். 

தலிபான்களுடன் தூதரக உறவை பேணியுள்ளதாக இந்தியா முதல்முறையாக ஒப்புகொண்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான ஷேர் முகமதை கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார். தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 முதல் 1982 வரை, மத்தியப் பிரதேசம் நோகானில்  உள்ள ராணுவ கல்லூரியில் ராணுவ வீரராகவும் பின்னர், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் அலுவலராகவும் ஷேர் முகமது பயிற்சி பெற்றார். மற்ற தலிபான் தலைவர்கள் போல் அல்லாமல் ஆங்கிலத்தில் நல்ல பெற்ற இவர், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். முன்னதாக, தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவு அமைச்சராகவும் ஷேர் முகமது பொறுப்பு வகித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT