உலகம்

நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி , 2 பேர் மாயம்

DIN

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேபாளம் நாட்டின் பார்பட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் சிக்கிக்கொண்டதை அடுத்து  அவர்களை மீட்கும் பணியில் இருக்கும் மீட்புப்படையினர் இதுவரை 6 சடலங்களை மீட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் , ' திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு உண்டாகி சிலர் உள்ளே புதைந்தனர் . தற்போது வரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருவர் மாயமாகி இருக்கிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

பருவக்காற்று ஆரம்பமானதைத் தொடர்ந்து இமைய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த கனமழை பொழிவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT