உலகம்

நியூயார்க் : 'இடா' புயலால் 45 பேர் பலி

DIN

நியூயார்க் நகரில் 'இடா' புயல் காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 45பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை புயலில்  சிக்கி 45 பேர் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.

முக்கியமாக புரூக்ளின் மற்றும் குயின்ஸ் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் முழ்கடிக்கப்பட்டு பலத்த சேதம் அடைந்திருப்பதாக  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎஃப்கே  ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. 
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT