முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 26 ஆயிரத்தை தாண்டிய கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
கோப்புப் படம்.
பகிர்:

பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் டான் செய்தி வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 59,745 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில், புதிதாக 3,787 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,71,578 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் பாசிட்டிவ் விகிதம் 6.33ஆக உள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 57 பேர் பலியானார்கள்.

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,035ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை அண்மை காலமாக கரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.