உலகம்

இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கான தடையை நீக்கிய பிலிப்பின்ஸ்

DIN

கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் செப்டம்பர் 6ஆம் தேதி அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வழங்கியுள்ளார். பிலிப்பின்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20310 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரண்டாவது அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT