உலகம்

இந்தோனேசிய சிறையில் தீ: 41 கைதிகள் பலி

DIN


ஜகார்த்தா: இந்தோனேசிய சிறைச்சாலையொன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 41 கைதிகள் பலியாகினர். 
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான டாங்கெராங் பகுதிச் சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. 
19 செல்களைக் கொண்ட அந்தச் சிறைச்சாலையின் சி}2  பகுதியில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி}2 பகுதியில் மட்டும் 122 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்; 80 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்கள்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததும், சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT