உலகம்

ஜப்பானில் அவசரநிலை செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு

PTI

ஜப்பானில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்தாலும், நடைமுறையிலிருக்கும் அவசரநிலை செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றம் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசரநிலையை, செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

தற்போது அமலில் இருக்கும் அவசரநிலையானது, வரும் ஞாயிறன்று முடிவடையவிருந்த நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை, படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமர் இது குறித்து கூறுகையில், கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், மக்கள் கரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT