தங்கச் சங்கிலிகளை தலைமுடியாக்கிய மெக்ஸிகோ பாடகர் 
உலகம்

தங்கச் சங்கிலிகளை தலைமுடியாக்கிய மெக்ஸிகோ பாடகர்

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல ராப் இசைப் பாடகர் டன் சூர். இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

DIN

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல ராப் இசைப் பாடகர் டன் சூர். இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக ராப் இசைக் கலைஞர்கள் தங்களது பாடல்களையும் தாண்டி வாழ்க்கை முறைகளையும் வித்தியாசமாக அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பது பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ராப் பாடகர் ஒருவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என செய்துள்ள செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

மெக்ஸிகோவைச் சேர்ந்த ராப் பாடகரான டன் சூர் தனது தலைமுடியை முழுவதுமாக நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக தங்கத்தினாலான சங்கிலிகளை தலைமுடிகள் போல் மாற்றியுள்ளார். 

அறுவை சிகிச்சை மூலம் தங்கச் சங்கிலிகளை தனது தலையில் பொருத்தியுள்ள இவர் இதனை மக்கள் யாரும் முயற்சித்து பார்க்க மாட்டார்கள் என கிண்டலடித்துள்ளார். 23 வயதான டன் சூர் தங்க பல் வரிசையையும் அமைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட  படம் தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT