உலகம்

ரஷிய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை

DIN

ரஷியா, ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய இடைவெளியில் அடைந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப்) சாதனை படைத்துள்ளாா்.

இதுதொடா்பாக தன்சானியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பினயா பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை சனிக்கிழமை எட்டினாா். இதன் மூலம் இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய கால இடைவெளியில் எட்டிய இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டா் உயரம் கொண்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டா் உயரம் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT