உலகம்

15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி: இங்கிலாந்து அறிவிப்பு

DIN

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எனினும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதால் தடுப்பூசி செலுத்துவது தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஃபைசர் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட உள்ள அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பின் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தேசிய சுகாதார சேவை பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தயாரித்து வருகிறது.

மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கரோனா பரவலில் இருந்து பாதுகாக்க 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக இங்கிலாந்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT