அந்தமானில் லேசான நிலநடுக்கம்
அந்தமான் தீவுப்பகுதியில் ஒன்றான காம்பெல் பேயில் இன்று புதன்கிழமை (செப்-15) அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் தீவுப்பகுதியில் ஒன்றான காம்பெல் பேயில் இன்று புதன்கிழமை (செப்-15) அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 40 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் , லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.