முகப்பு
உலகம்

‘ரஷிய பல்கலை.யில் பயிலும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’: தூதரகம்

ரஷியாவில் துப்பாக்கிச் சூடு நடந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷியாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2021 at 3:27 PM
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
பகிர்:

ரஷியாவில் துப்பாக்கிச் சூடு நடந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷியாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

Advertisement

“ரஷிய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் நலம்பெற வாழ்த்துகிறோம்.

அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.