உலகம்

பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுத்த அமெரிக்க உணவு விடுதி

DIN

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அமெரிக்காவில் உணவு விடுதிக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரொவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டுத் தலைவர்கள் நியூயார்க் நகரில் முகாமிட்டு வருகின்றனர்.

ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உணவு விடுதிக்கு சென்ற பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு உணவு விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பிரேசில் அதிபர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் கரோனா விதிமுறைகளின்படி அவர் அனுமதிக்கப்படவில்லை என உணவு விடுதி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. உணவு விடுதியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பிரேசில் அதிபர் உணவு விடுதிக்கு வெளியில் நின்று உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT