உலகம்

ஆப்கனில் பெண்களுக்கு கல்வி எப்போது? தலிபான்கள் பதில்

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு கல்வி உரிமை விரைவில் வழங்கப்படும் என தலிபான்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்நாட்டில் தங்களின் மதச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக பெண்களுக்கு கல்வி மற்றும் வேலையில் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை கோரி அந்நாட்டு பெண்கள் காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்தன. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விரைவில் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,    “இதுகுறித்து இறுதி செய்தி வருகிறோம். விரைவில் பெண்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய திறமையான நிர்வாகத்தை வழங்க உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்த தலிபான்கள் பெண் உரிமைகளில் தலையிட்டு வருவதாக விமரிசனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT