அந்தமானில் லேசான நிலநடுக்கம்
அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்-21) இரவு 11.45 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்-21) இரவு 11.45 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் , லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.
முன்னதாக செப்-15 அன்று அந்தமானில் 5.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.