உலகம்

துனிசியாவில் பொறுப்பேற்கும் முதல் பெண் பிரதமர்

DIN

துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக நஜ்லா போடன் ரோம்தானே பொறுப்பேற்க உள்ளார்.

துனிசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கியில் பணியாற்றிய நஜ்லா போடன் ரோம்தானே துனிசியா நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக அந்நாட்டின் அதிபர் கைஸ் சயீத் அறிவித்துள்ளார்.

63 வயதான ரோம்தானே நாட்டின் உயர்கல்வி அமைச்சகத்தில் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பேற்புகளை வகித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அதிபர் கைஸ் சயீத் முந்தைய அரசைக் கலைத்து உத்தரவிட்ட நிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்க உள்ள நஜ்லா பத்தாவது பிரதமராவார். நாட்டில் நிலவி வரும் ஊழலை ஒழிப்பதே புதிய அரசின் நோக்கமாக இருக்கும் எனவும் மருத்துவம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் துனிசிய மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என அதிபர் சயீத் உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT