மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் பலி
ஜப்பானில் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் மாடர்னா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் உயிரிழந்தனர். அந்த தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது பின்னர், நடைபெற்ற விசாரணையில் தெரியவந்ததாக ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட சில நாள்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை அன்று தடுப்பூசி உற்பத்திக்கு மூன்று இடங்களில் தடை விதிக்கப்பட்டது.
அந்த மூன்று உற்பத்தி மையங்களிலிருந்து வந்த தடுப்பூசிகளைதான் இறந்தவர்கள் செலுத்தி கொண்டுள்ளனர். இறப்பின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பழிக்குப் பழி: ஆப்கனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
தடுப்பூசி நிரப்பப்பட்ட வயலில் உலோகத் துகள்கள் இருப்பதாக கேடா மருந்து நிறுவனத்திற்கு புகார் வந்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள 863 தடுப்பூசி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 1.63 மில்லியன் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
செயல்திறன் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தடை விதிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவே தடை விதிக்கப்பட்டதாகவும் ஜப்பான் அரசு மற்றும் மாடர்னா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.