கென்யா: வறட்சியால் மடிந்த உயிர்கள்..
கென்யா நாட்டில் கடும் வறட்சி காரணமாக வன உயிரிகள் இறப்பு அதிகரித்து வருகிறது.
கென்யா நாட்டில் கடும் வறட்சி காரணமாக வன உயிரிகள் இறப்பு அதிகரித்து வருகிறது.
கென்யாவில் இந்தாண்டு அதிக மழை பெய்யாததால் பல வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜிப் , அல் ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாத மழை 30 சதவீதத்திற்கும் குறைவாக பெய்திருப்பதால் அப்பகுதி சார்ந்த வனங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
இதனால் , பல வன உயிரனங்கள் நீர் , உணவு கிடைக்காமல் உயிரிழந்தது.
Advertisement
இந்த நிலையில் சமீபத்தில் இணைத்தில் கென்யாவின் வஜீர் வனப்பகுதியில் வறட்சியால் உணவில்லாமல் ஒன்றாக இறந்து கிடந்த 6 ஒட்டகச்சிவிங்கியின் புகைப்படங்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.