முகப்பு
உலகம்

நைஜீரியா: தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலி

சமீப காலமாக நைஜீரியாவில் தீவிரவாதத் தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (செப்-27) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலியாகியிருக்கிறார்கள

Updated On : 28 செப்டம்பர், 2021 at 11:00 AM
நைஜீரியா: தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலி
பகிர்:

சமீப காலமாக நைஜீரியாவில் தீவிரவாதத் தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்-26) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான கதுனாவைச் சேர்ந்த மடாமி கிராமத்தில் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த 34 பேர் உயிரிழந்தனர்.7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

தப்பிய தீவிரவாதிகளை தீவிரமாகத் தேடி வருவதாக அம்மாகாண அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.