கோப்புப்படம் 
உலகம்

ஆப்கானிஸ்தான்: பீரங்கி வெடிகுண்டு வெடித்து 5 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

DIN

ஹெல்மண்ட் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடிகுண்டு வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

இந்த சம்பவம் ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்ததாக ஹெல்மண்டின் மாகாண அதிகாரிகள் கூறியதாக தி காமா ஊடகம்  தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பீரங்கி வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பீரங்கி வெடிகுண்டு வெடித்தது. அதில் 5 குழந்தைகள் பலியாகினர். காயமடைந்த 2 பேர் மர்ஜா மாவட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல்லா தெரிவித்தார்.

வெடிக்காத துண்டுகள், பீரங்கி வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உயிரழப்பு ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT