உலகம்

ஆப்கனில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்: உலக நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள்

DIN

ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால் மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.போதிய உற்பத்தியின்மை, விநியோகச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனில் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 2.3 கோடி பேர் பசியால் வாடும் சுழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாள்தோறும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் அவற்றை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே அந்நாட்டில் கோதுமை இருப்பு குறைந்துவருவதாக எச்சரிக்கட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட உள்ள உணவு தானிய பற்றாக்குறையைத் தவிர்க்க 440 கோடி அமெரிக்க டாலர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலைத் தவிர்க்க உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உதவ முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவை கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT