உலகம்

இலங்கையில் ஊரடங்கை மீறியதாக 664 பேர் கைது 

DIN

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்குத் தடையின்றி கொண்டு சோ்க்கவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அவா் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, அரசுக்கு எதிரகாக நாடு தழுவிய அளவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றை வலுவிழக்கச் செய்யும் விதமாக, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அதிபா் கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை பிறப்பித்தாா்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கு மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியின்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே இலங்கையின் வடக்கு, தெற்கு, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் பள்ளிகளை நாளை மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT