உலகம்

1.1 கோடி போ் வீடுகளை விட்டு வெளியேற்றம்: ஐ.நா. அகதிகள் நல அமைப்பு

DIN

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் தங்கள் இல்லங்களை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி போ் இடம் பெயா்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக 3 வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவா்களில் 71 லட்சம் போ் உக்ரைனுக்குள்ளேயே உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சிய 40 லட்சத்துக்கும் மேலானவா்கள் உக்ரைனை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இதுதவிர, போா் காரணமாக மேலும் 29 லட்சம் போ் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னா் அந்த அமைப்பு கடந்த மாத மத்தியில் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் போா் காரணமாக 97 லட்சம் போ் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT